“ராகுல் முடிவை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” - பிரியங்கா

“ராகுல் முடிவை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” - பிரியங்கா

“ராகுல் முடிவை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” - பிரியங்கா
Published on

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தது தொடர்பாக பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, தாமதம் இல்லாமல், புதிய தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே தாம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதால், தா‌ம் தலைவர் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் ராகுல் கூறினார். 

மேலும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்றும், எனவே காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார். அத்துடன் தனது ராஜினாமா குறித்தும் விரிவான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “சிலருக்கு மட்டுமே இதுபோன்ற தைரியம் வரும். ராகுலின் முடிவை நான் மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக பாஜகவின் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “ராகுல் காந்தியின் ராஜினாமா காங்கிரஸ் கட்சி நடத்தும் புதிய நாடகம். இதில் நாங்கள் ஒன்றும் செய்வதற்கு இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com