இந்தியாவில் அறிமுகமானது ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட் பேண்ட்!
இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் செம ஸ்மார்ட்டாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் மணி பார்க்க உதவும் கை கடிகாரமும் ஸ்மார்ட்டாகி உள்ளது. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் பேண்டுகளை தயாரித்து, சந்தையில் விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில் ஜெப்ரானிக்ஸ் நிறுவனமும் ஸ்மார்ட் பேண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Zeb-Fit2220CH என்ற இந்த பேண்டில் 8 விதமான ஸ்போர்ட்ஸ் மோடுகள் இடம் பெற்றுள்ளன. அதோடு வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டன்சும் இதில் இடம்பெற்றுள்ளது.
3.3 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட வட்ட வடிவிலான இந்த ஸ்மார்ட் பேண்டில் 100 வகையிலான கஸ்டமைஸ் வாட்ச் பேசஸ் உள்ளன. ஆண்ட்ராய்ட் மாறும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இதனை இணைத்துக் கொள்ளலாம். மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் வாட்சை அமேசானில் மட்டுமே ஆர்டர் செய்ய முடியும். இதன் விலை 2999 ரூபாய்.
வண்ண டிஸ்பிளேவில் வெளியாகி உள்ள இந்த வாட்சில் பேட்மிண்டன், கூடைப்பந்து, சைக்கிளிங், கால்பந்து, ஓட்டம், ஸ்கிப்பிங், நீச்சல் மற்றும் நடைப்பயிற்சி மாதிரியானவற்றை டிரேக் செய்யுமாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 நாட்கள் வரை பேட்டரி திறன் நீடிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.