முடங்கியது யூ டியூப் இணையதளம் !

முடங்கியது யூ டியூப் இணையதளம் !

முடங்கியது யூ டியூப் இணையதளம் !
Published on

உலகம் முழுவதும் தினசரி கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் யூடியூப் இணையதளம் தற்போது முடங்கியுள்ளது.

இப்போது யூ டியூப் இணையதளத்தை பயன்படுத்தாதவர் யாரும் இல்லை என சொல்லலாம். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் நாள்தோறும் யூ டியூப் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். வீடியோக்கள்தான் யூ டியூப்பின் முக்கிய அம்சம். திரைப்பட பாடல்கள், படங்கள் என எந்தவகையான வீடியோக்களையும் யூ டியூப்பில் பார்க்கலாம். தனிநபர்களும் தங்கள் பெயரில் ஒரு கணக்கை தொடங்கி அதில் தங்களின் வீடியோக்களை பதிவேற்றும் வசதியும் இதில் இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு கிராமத்தில் நடைபெறும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை வீடியோவாக இங்குள்ள யாரோ ஒருவர் பதிவேற்றும்போது அதனை உலகம் முழுவதும் உள்ளோர் காணும் வசதி உள்ளது. இப்படி வீடியோவிற்கு பெயர்போன யூடியூப் இணையதளம் தற்போது முடங்கியள்ளது. சர்வர் பிரச்சனை காரணமாக யூ டியூப் இணையதளம் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர்நுட்ப தொழில்நுட்ப குழுவினர் பிரச்னையை சரிசெய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

யூ டியூப் இணையதளம் திடீரென முடங்கியுள்ளதையடுத்து அதனை பயன்படுத்தும் கோடிக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே யூ டியூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில் “யூ டியூப் சரியாக இயங்கவில்லை என நீங்கள் தந்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. யூ டியூப் டிவி, யூ டியூப் மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சரிசெய்த பின்பு தகவல் தெரிவிக்கப்படும். இடையூறு ஏற்பட்டுள்ளதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com