இதையெல்லாம் வாட்ஸ் அப்பில் செய்தால் நீங்கள் குற்றவாளி!

இதையெல்லாம் வாட்ஸ் அப்பில் செய்தால் நீங்கள் குற்றவாளி!
இதையெல்லாம் வாட்ஸ் அப்பில் செய்தால் நீங்கள் குற்றவாளி!

வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக அது உள்ளது. இந்தியாவில் வாட்ஸ் அப்பில் அதிக அளவில் வதந்திகள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனை தடுக்க வாட்ஸ் அப் நிர்வாகம் முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றும் அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி குற்றநடவடிக்கைகளின் விசாரணைக்கோ, அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றாலோ உங்களது வாட்ஸ் அப் தகவல்கள் போலீசாருக்கு வழங்கப்படும். நீங்கள் என்ன பேசினீர்கள், யாருடன் பேசினீர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற போலீசாருக்கு உரிமை உண்டு. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் என்னவெல்லாம் செய்தால் குற்றம் என தொழில்நுட்ப விதி 2000 சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

1. வாட்ஸ்அப்  குரூப் அட்மின்கள் ஒரு குழுவின் தலைவராகவே கருதப்படுவர். தங்கள் குழுவில் உள்ள யாருடனும் தவறாக நடத்தையில் ஈடுபட்டார் என்ற புகாருக்கு உள்ளானால் குரூப் அட்மினை கைது செய்ய உரிமை உண்டு.

2. வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்தாலோ, பாலியல் தொழில் தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டாலோ குற்றமாக கருதப்படும்

3. அரசியல், சினிமா,விளையாட்டு என எந்த துறையைச் சேர்ந்த முக்கியமானவர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்தால் குற்றமாகும். குறிப்பாக முகத்தை மாற்றி செய்யப்படும் மார்ஃப்டு வேலைகளுக்கு தண்டனை உண்டு என்கிறது சட்டவிதி.

4.பெண்களுக்கு வாட்ஸ் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்தாலோ, பாலியல் ரீதியாக பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினாலோ தண்டனை நிச்சயம். குறிப்பிட்ட புகாரின் படி வாட்ஸ் அப் சாட்கள் ஆதாரமாக கொள்ளப்படும்.

5. பேஸ்புக், ட்விட்டரில் பேக் ஐடி போல, ஒரு எண்ணை வேறொருவர் எண்ணாக பாவித்து வேறொருவர் பெயரிலேயே வாட்ஸ் அப் கணக்கை நடத்தினாலும் குற்றம்.  

6. குறிப்பிட்ட எந்த இனம், மதம், மொழி சார்ந்த எதிர்ப்பு கருத்துகளை வாட்ஸ் அப்பில் பகிரக்கூடாது. வன்முறையை தூண்டுவது மாதிரியான எந்தக்கருத்துகளை பகிர்ந்தாலும் அது குற்றமாகவே கருதப்படும்.

7. வதந்திகளை பரவுதல் என்பது வாட்ஸ் அப்பில் எளிதாக நடந்தேறி வருகிறது. வாட்ஸ் அப் வதந்திகள் பல உயிர்களையும் காவுவாங்கி வருகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும், வதந்திகளையும் பரப்பினால் அது குற்றமாக கருதப்படும்

8. வாட்ஸ் அப் மூலம் போதைப்பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபட்டாலோ, போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து ஊக்கப்படுத்தினாலோ கைது நிச்சயம்

9. மறைமுகமாக எடுக்கப்பட்ட வீடியோக்களையோ அல்லது ஒருவர் அனுமதியின்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை பகிர்ந்தாலோ குற்றமாக கருதப்படும்.

10. ஆபாச படங்களை பரப்புதல், ஆபாசம் தொடர்பான பொருட்கள் குறித்து விவாதம், விற்பனை ஆகியவை வாட்ஸ் அப்புக்கான எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கும் தண்டனை சாத்தியம்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com