சோஷியல் மீடியா லைக்ஸ் மற்றும் ஃபாலோயர்கள் விற்பனைக்கு!

சோஷியல் மீடியா லைக்ஸ் மற்றும் ஃபாலோயர்கள் விற்பனைக்கு!
சோஷியல் மீடியா லைக்ஸ் மற்றும் ஃபாலோயர்கள் விற்பனைக்கு!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் மற்றும் போலியான ஃபாலோயர்களை பணம் கொடுத்து வாங்க இயந்திரம் ஒன்று ரஷ்யாவில் வைக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் மாஸ்கோவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தில் உங்களது இன்ஸ்டாகிராம் கணக்கை பதிவு செய்து, நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப லைக்ஸ் மற்றும் ஃபாலோயர்கள் கிடைப்பார்கள். 48,000 ரஷ்ய ரூபிள்கள் (ரூ.54,000) செலுத்தினால் உங்களுக்கு 1,50,000 ஃபாலோயர்கள் கிடைப்பார்கள். உங்களின் ஒவ்வொரு பதிவுக்கும் குறைந்தது 1,500 லைக்குகள் கியாரண்டியாம். அதேபோல 100 ரூபிள்கள் (ரூ.56) செலுத்தினால் 100 லைக்குகளைப் பெறலாம். ஃபாலோயர்கள் மற்றும் லைக்குகளை விலைக்கு வாங்குவது மட்டுமல்லாமல், இந்த இயந்திரத்தின் மூலம் உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நேரடியாக புகைப்படங்களை பிரிண்ட செய்து கொள்ளவும் முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com