இந்த ரோபோட்டை மடித்து பையில் வைத்துக் கொள்ளலாம்

இந்த ரோபோட்டை மடித்து பையில் வைத்துக் கொள்ளலாம்

இந்த ரோபோட்டை மடித்து பையில் வைத்துக் கொள்ளலாம்
Published on

அமெரிக்காவில் உள்ள ஹர்வார்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மடிக்கும் தன்மை வாய்ந்த புதிய ரோபோட் ஒன்றை வடிவமைத்துள்ளனர். 

ஜப்பானின் பாரம்பரிய கலையான ‘ஒரிகாமி’ என்னும் முறையை பின்பற்றி இந்த ரோபோட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஓரிகாமி என்றால் சிறு சிறு துண்டு பேப்பர்களை மடித்து அதனை ஒன்றாக அடுக்கி ஒரு வடிவத்திற்கு கொண்டு வரும் கலையாகும். இதே போன்று பல சிறிய பொருட்களை ஒன்று சேர்த்து இந்த மடிக்கும் தன்மை வாய்ந்த ரோபோட் உருவக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ரோபோட் என்றால் அதற்கு வயர், பேட்டரி போன்றவை தேவைப்படுவதால் அதன் செயல்பாடுகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே அடங்கி விடுகின்றன. ஆனால் இந்த ரோபோட்டிற்கு பேட்டரி தேவை இல்லை. இந்த ரோபோட் வயர்லெஸ் மாக்னெட்டிக் ஃபீல்ட் (wireless magnetic field) மூலம் இயக்கப்படுகிறது. 

இந்த ரோபோட் பேப்பரைப் போன்று மிக மெல்லியதாக உள்ளது. இது மூன்று முக்கோண வடிவிலான இணைப்பைக் கொண்டுள்ளது. இதில் இணைக்கப்பட்டுள்ள சிறிய உலோக பகுதியின் மூலம் இந்த ரோபோட் இயங்குவதற்கான சக்தி அளிக்கப்படுகிறது. இந்த மிகச் சிறிய ரோபோட்டை கையில் வைத்துக் கொள்ளலாம். மடித்துப் பையிலும் வைத்துக் கொள்ளலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com