ஆப்பிள் ஐ போன் 12 சீரிஸை சீண்டிப் பார்க்கும் சியோமி
டெக் உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனுக்கு என்றுமே அமோக வரவேற்பு உண்டு. அந்த காரணத்தினாலேயே விலை உட்பட எந்த விஷயத்திலும் சமரசமே செய்து கொள்ளாமல் பல்வேறு ஐ போன் சீரிஸை ஆப்பிள் நிறுவனம் லான்ச் செய்து கொண்டே இருக்கிறது.
அண்மையில் ஐ போன் 12 சீரிஸை லான்ச் செய்தது ஆப்பிள் நிறுவனம். இருப்பினும் இந்த முறை 12 சீரிஸ் போன்களை வாங்குபவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.
சார்ஜர் மற்றும் EAR POD போன்றவற்றை 12 சீரிஸின் பாக்ஸில் சேர்க்காமல் வெறுமனே போனை மட்டும் விற்பனை செய்கிறது ஆப்பிள் நிறுவனம்.
அதனை ட்ரோல் செய்யும் வகையில் அண்மையில் சாம்சங் நிறுவனம் விமர்சித்திருந்தது.
அந்த வரிசையில் சியோமி நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது.
“MI 10T PRO பாக்ஸை ஓப்பன் செய்யும் வாடிக்கையாளர்கள் எதற்காகவும் கவலை கொள்ள வேண்டாம். பாக்ஸில் நாங்கள் எதையும் விட்டுவிடவில்லை” என சொல்லி வீடியோவையும் பகிர்ந்துள்ளது.
தற்போது அந்த வீடியோ ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.