\
ரெட்மி நோட் 10 மார்ச் மாதம் வெளியாவது உறுதி!

ரெட்மி நோட் 10 மார்ச் மாதம் வெளியாவது உறுதி!

ரெட்மி நோட் 10 மார்ச் மாதம் வெளியாவது உறுதி!
Published on

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 மார்ச் மாதம் வெளியாவது உறுதி ஆகியுள்ளது. இதனை சியோமி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அது  தொடர்பான டீஸரை ரெட்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2021ல் வெளிவர உள்ள போன்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற ஸ்மார்ட்போன்களில் நோட் 10 போனும் ஒன்று. இந்த போனின் ஸ்பெசிபிகேஷன் தொடர்பான விவரங்கள் எதுவும் இதில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இருந்தாலும் ஸ்நேப்டிராகன் 750G SoCs மற்றும் 108 மெகாபிக்ஸல் கொண்ட கேமிரா இந்த போனில் இடம்பெற்றிருக்கலாம்  என்ற வதந்தியும் முன்னதாக பரவி இருந்தது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி போனுக்கென பிரத்யேக வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com