‘கேம் பிரியர்களுக்காக ஸ்மார்ட்போன்’ - வெளியானது சியோமி “பிளாக் ஷார்க் 2”

‘கேம் பிரியர்களுக்காக ஸ்மார்ட்போன்’ - வெளியானது சியோமி “பிளாக் ஷார்க் 2”
‘கேம் பிரியர்களுக்காக ஸ்மார்ட்போன்’ - வெளியானது சியோமி “பிளாக் ஷார்க் 2”

கேம் பிரியர்களுக்காகவே சியோமி நிறுவனம் 2வது முறையாக புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் ‘பிளாக் ஷார்க்’ என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. கேம் பிரியர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் மீண்டும் கேம் பிரியர்களுக்காக அடுத்த ஸ்மார்ட்போனை சியோமி வெளியிட்டுள்ளது. இந்த போன் முன்னதாக வெளியான ‘பிளாக் ஷார்க்’ மாடலை அப்டேட் செய்யும் வகையில் ‘பிளாக் ஷார்க் 2’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேம் விளையாடுவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன், 6.39 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாகும். ஸ்கீரில் டச் சென்ஸார் வசதி உள்ளது. இதில் ஸ்நாப் ட்ராகன் 855 ப்ராசஸர் மற்றும் ஆன்ரெனோ 640 ஜிபியூ வழங்கப்பட்டுள்ளது. இது ஆன்ரெனோ 630-ஐ விட 20% வேகமாக இயங்கும். அத்துடன் கேம் விளையாடும் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட நேரம் போன் ஜார்ச் நிக்க வேண்டும் என்பதற்காக 4,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை 27 வாட் ஜார்ஜர் மூலம் பல நிமிடங்களிலேயே ஜார்ஜ் ஏற்றிவிடலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த போன் 6 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் என 4 ரகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.33,000 ஆகும். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.36,000 ஆகும். 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.39,000 ஆகும். 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.43,000 ஆகும். கேமராவை பொருத்தவரையில் பின்புறத்தில் 48 எம்பி (மெகா பிக்ஸல்) மற்றும் 12 எம்பி என இரட்டை கேமரா உள்ளது. முன்புறத்தில் 20 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com