அட்டகாசமான கேமரா வசதியுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ..!

அட்டகாசமான கேமரா வசதியுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ..!
அட்டகாசமான கேமரா வசதியுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ..!

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் ரெட்மி 7 ப்ரோ. இது 48 மெகா பிக்ஸல் கேமராவுடன் ஸ்மார்ட்போன் சந்தையை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டு வருகின்றன. இதிலும் துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை பதிவு செய்யும் கேமரா கொண்ட போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. ஏனென்றால் தற்போதைய இளைஞர்கள் செல்ஃபி எடுப்பது மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

எனவே அதற்கேற்ப தங்களை அழகாக காட்டும் கேமராக்களை கொண்ட போனுக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனையறிந்து சியோமி தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி 7 ப்ரோ தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே சியோமி நிறுவனத்தில் ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த ரெட்மி 7 ப்ரோ போன் இருக்கும் என சியோமி தெரிவித்துள்ளது. 

மேலும் இந்தப் புதிய ரெட்மி 7 ப்ரோ தனி இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த போன் முழுக்க முழுக்க கேமராவை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 48 எம்பி கொண்ட கேமரா வழங்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு. 

ரெட்மி நோட் 7 புரோவின் சிறப்பம்சங்கள் :

ரேம் : 4 மற்றும் 6 ஜிபி

டிஸ்ப்ளே : 6.3 (6.29) இன்ச் 

கைரேகை பதிவு : உண்டு

இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 64 மற்றும் 128 ஜிபி

கேமரா : பின்புறம் 48 எம்பி 

செல்ஃபி கேமரா : 13 எம்பி

பேட்டரி : 4,000 எம்.ஏ.எச்

சியோமியின் இந்த ரெட்மி 7 ப்ரோ, ஸ்மார்ட்போன் சந்தையை இந்த வருடம் தலைகீழாக மாற்றும் என இந்நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் மனுகுமார் ஜெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிவப்பு, நீலம், கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும் ரெட்மி நோட் 7 புரோவின் விலை சுமார் 14 ஆயிரம் ரூபாய் (4+64) முதல் 17 ஆயிரம் ரூபாய் (6+128) வரை இருக்கும். மேலும் ரெட்மி 7 ப்ரோ வரும் 13 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com