சீனாவை சேர்ந்த பிரபல ஜியோமி நிறுவனம் தனது ஏழாவது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
நாளை ஜியோமி தனது 7வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு Mi Fan Festival என்ற பெயரில் சிறப்பு ஆஃபர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையடுத்து Mi.com இணையதளத்தில், 1 ரூபாய்க்கு ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை விற்பனை செய்யவுள்ளது.
இந்த சலுகையானது செயலியில் மட்டும் வழங்கப்படுவதால், மொபைலில் மி ஆப் டவுன்லோட் செய்து, ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். ஸ்மார்ட்போன்விற்பனை ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். மதியம் 2 மணிக்கு 40 மி பேண்ட் 2, பவர் பேங்க் ஆகியவற்றை 1 ரூபாய்க்கு வாங்கலாம். மேலும் ப்ளு டூத். ஸ்பீக்கர். செல்பி ஸ்டிக் ஆகியவையும் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யவுள்ளது. அதேபோல் ரெட்மி 4A ரோஸ் கோல்டு விற்பனையையும் நாளை ஜியோமி தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது.