தீப்பிடித்து எரிந்த ரெட்மீ நோட் 4

தீப்பிடித்து எரிந்த ரெட்மீ நோட் 4
தீப்பிடித்து எரிந்த ரெட்மீ நோட் 4

ஜியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட் போன் தீப்பிடித்து எரிந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் சாம்சங், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக, சீன தயாரிப்பான ஜியோமியும் தொடர்ந்து அசராமல் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியபடி இருக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவின் பெங்களூரில் அமைந்திருக்கும் செல்போன் கடை ஒன்றில் கடைக்காரர், வாடிக்கையாளரின் ஜியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனை வாங்கி அதில் சிம் கார்ட்டை போட முயலும்போது திடீரென போன் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து போனை கடைக்காரர் கீழே போட்டு விட்டு தீயை அணைப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சார்ஜர் அல்லது வேறு எந்த எலக்ட்ரிக் சாதனத்துடனும் மொபைல் இணைக்கபடாத நிலையில், திடீரென போன் தீப்பிடித்து எரிந்ததாக கடைக்காரரும், வாடிக்கையாளரும் புகார் தெரிவித்துள்ளனர்.  

இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள ஜியோமி நிறுவனம் வாடிக்கையாளர் கம்பெனி சார்ஜர் அல்லாத பிற சார்ஜரை பயன்படுத்தியதே போன் தீப்பிடிக்க காரணம் என தெரிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் போன் தீப்பிடித்தது குறித்து கேட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, உத்தரபிரதேசத்தில், அலுவலக மேஜையில் அமர்ந்து ஊழியர் ஒருவர் போன் பேசி கொண்டிருந்த போது Xiaomi Mi 4i ஸ்மார்ட்போன் தீ பிடித்து எரிந்தது. இது தொடர்பான  சி.சி.டி.வி காட்சியை அவர் தனது  பேஸ்புக்கில் பதிவிட்டது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com