\
6ஜிபி ரேம்.. விரைவில் வருகிறது ரெட்மி 9 பவர்?!

6ஜிபி ரேம்.. விரைவில் வருகிறது ரெட்மி 9 பவர்?!

6ஜிபி ரேம்.. விரைவில் வருகிறது ரெட்மி 9 பவர்?!
Published on

ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேமுடன் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த டிசம்பரில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை இரண்டு வேரியண்ட்டுகளில் வெளியிட்டிருந்தது ஜியோமி நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த இரண்டு போன்களிலும் 4ஜிபி ரேம் இடம்பெற்றிருந்தது. தற்போது அதே மாடலை 6ஜிபி ரேம் வேரியண்டாக வெளியிட உள்ளதாக தெரிகிறது. 

கூடிய விரைவில் இந்த போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும் என தெரிகிறது. இந்த 6ஜிபி வேரியண்ட் போனின் விலை 12999 ரூபாய் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள். 

இதே ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டுள்ள போன் 10999 ரூபாய்க்கும்,  4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டுள்ள போன் 11999 ரூபாய்க்கும் தற்போது சந்தையில் விற்பனையாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com