சகல வசதிகளுடன் அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி4

சகல வசதிகளுடன் அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி4

சகல வசதிகளுடன் அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி4
Published on

ரெட்மி 4 என்கிற புதிய ஸ்மார்ட்போனை ஜியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மொத்தம் 3 விதமான ரகங்களில் ரெட்மி 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 6,999 முதல் 10,999 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

6,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் வசதியும், 16 ஜிபி ரோம் வசதியும் இருக்கிறது. 8,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், மற்றும் 32ஜிபி ரோம் வசதியுடனும், 10,999 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம், 64 ஜிபி ரோம் வசதியுடனும் வெளிவருகிறது.

கேமரா ப்ரியர்களுக்கு ஏற்றவகையில் இந்த மூன்று விதமான ஸ்மார்ட்போன்களிலும் 5 மெகா பிக்சல் முன்பக்க கேமராவும், பின்பக்கம் 13 மெகாபிக்சல் கேமரா திறனும் உள்ளது. 4100 மில்லி ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி மூன்றுவிதமான போன்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சார்ஜ் சிறந்த முறையில் நிற்கும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக காஸ்ட்லி போன்களில் காணப்படும் ஃபிங்கர் பிரிண்ட் வசதி இந்த ஸ்மார்ட்போன்களின் கூடுதல் சிறப்பம்சங்களாகும்.

இந்த 3 ரக ரெட்மி 4 ஸ்மார்ட்ஃபோன்களின் பொதுவான சிறப்பம்சங்களாக, 5 இன்ச் ஹெச்டி தொடுதிரை, 2.5 டி கர்வ்டு கிளாஸ், ஆன்ட்ராய்ட் 6.0 மார்ஷ்மெலோவ் பயன்பாட்டு மென்பொருள், 128 ஜிபி வரை சேமிப்புத் திறனை நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மே 23-ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது. குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் இதனை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com