இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் : சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் : சிறப்பம்சங்கள் என்ன?
இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் : சிறப்பம்சங்கள் என்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஜியோமி நிறுவனத்தின் புத்தகம் புது வரவான ரெட்மி 10 பிரைம் போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த 2020 ஆகஸ்ட்டில் வெளியான ரெட்மி 9 பிரைம் போனின் அப்கிரேட் வெர்ஷனாக இந்த மாடல் அறிமுகமாகி உள்ளது. 

இந்த போனின் சிறப்பம்சங்கள் என்ன?

ஹோல் பன்ச் டிஸ்ப்ளே டிசைன், ரியர் சைடில் மூன்று கேமரா, அதில் பிரைமரி கேமரா 50 மெகாபிக்ஸல் கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ G88 SoC, டியூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் 11, 6.5 இன்ச் ஃபுல் HD டிஸ்பிளே, டியூயல் நானோ சிம் 4G LTE சப்போர்ட், டைப் C போர்ட், 6000mAh பேட்டரியும் கொண்டுள்ளது. 

இந்த போனின் விலை 12,499 ரூபாய் முதல் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7-ஆம் தேதி முதல் போன் விற்பனைக்கு வருகிறது. மூன்று வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com