‘108 எம்பி’ கேமரா - விரைவில் வெளியாகவுள்ள எம்.ஐ ‘நோட் 10’

‘108 எம்பி’ கேமரா - விரைவில் வெளியாகவுள்ள எம்.ஐ ‘நோட் 10’

‘108 எம்பி’ கேமரா - விரைவில் வெளியாகவுள்ள எம்.ஐ ‘நோட் 10’
Published on

சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் 108 எம்பி கேமராவைக் கொண்ட முதல் ஸ்மார்ட்ஃபோன் எம்.ஐ ‘நோட் 10’ என்ற புது மாடலை விரைவில் களமிறக்கப்போகிறது. 

குறைந்த எடையில் ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபோன், 6.47 இன்ச் மெகா டிஸ்பிளேவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. திரையில் துல்லியத்துக்கு 2,340 பிக்ஸல் ரெசல்யூசன், 6 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ், 108 எம்பி முதன்மை கேமரா, இதனுடன் 20 எம்பியில் இரண்டாவதாக ஒரு கேமரா, 12 எம்பியில் மூன்றாவது கேமரா என மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன. 

இதுபோக 32 எம்பியில் செல்ஃபி கேமரா, 36 மணி நேரத்துக்கு தொடர்ந்து சார்ஜ் நிற்க 5,170 எம்.ஏ.எச் (mAh) பேட்டரி திறன் என பிற முன்னணி செல்ஃபோன்களுக்கு சவால் விடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் வெளியாகும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com