அடுத்த வாரம் வருகிறது எம்ஐ 8 : 8 ஜிபி ரேம்..

அடுத்த வாரம் வருகிறது எம்ஐ 8 : 8 ஜிபி ரேம்..

அடுத்த வாரம் வருகிறது எம்ஐ 8 : 8 ஜிபி ரேம்..
Published on

ஜியோமி மொபைல் நிறுவனத்தின் எம்ஐ 8 ஸ்மார்ட்போன் அடுத்தவாரம் (செப். 19) வெளியாகவுள்ளது.

இந்தியச் சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனைகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் இடத்தை பிடிக்கும் முனைப்பில் அனைத்து நிறுவனங்களும், புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்த ஸ்டார்ட்போன்களில் ஒன்றாக எம்ஐ திகழ்கிறது. அதிலும் ரெட்மி ரக ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் வெளியாகி ஸ்மார்ட்போன் பிரியர்களை கவர்ந்துவிட்டது.

இந்நிலையில் எம்ஐ 8 என்ற புதிய ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. 6.26 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளேவுடன் வெளியாகும் இப்போன், 3 ரகங்களில் வெளிவருகிறது. இதன் பின்புறத்தில் 12 எம்பி இரட்டைக்கேமராவும், முன்புறத்தில் 24 எம்பி செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 3 ரகங்களை பொருத்தவரை 4 ஜிபி/ 6 ஜிபி/ 8 ஜிபி ரேம் உடனும், 32 ஜிபி/ 64 ஜிபி/ 128 ஜிபி இண்டெர்நல் மெமரியுடன் விற்பனைக்கு வருகிறது. மெமரி அளவுகளை சார்ந்து அதன் விலையில் மாறுபடும். 3,250 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி இந்த ஸ்மாட்ர்போனில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com