உலகின் முதல் குறுஞ்செய்தியின் NFT-யை ஏலம் விடும் வோடஃபோன்

உலகின் முதல் குறுஞ்செய்தியின் NFT-யை ஏலம் விடும் வோடஃபோன்
உலகின் முதல் குறுஞ்செய்தியின் NFT-யை ஏலம் விடும் வோடஃபோன்

உலகின் முதல் குறுஞ்செய்தியின் (SMS) NFT-யை ஏல நடைமுறையின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக வோடஃபோன் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதியை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க உள்ளதாம் பிரிட்டிஷ் நாட்டை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த பன்னாட்டு டெலிகாம் நிறுவனம். 

கடந்த 1992, டிசம்பர் 3-ஆம் தேதி அன்று உலகின் முதல் குறுஞ்செய்தி வோடஃபோன் நெட்வொர்க் மூலமாக அனுப்பப்பட்டது. அதனை வோடஃபோன் ஊழியர் ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவர் ரிசீவ் செய்திருந்தார். ‘Merry Christmas’ என்ற செய்திதான் உலகில் அனுப்பப்பட்ட முதல் குறுஞ்செய்தி. 

பிரான்ஸ் நாட்டில் உள்ள Aguttes ஏல மையத்தில், இந்த NFT வரும் 21-ஆம் தேதி அன்று ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏலத்தில் எடுப்பவர் எத்திரியம் கிரிப்டோ கரன்சியில் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்திடம் ஏல தொகை வழங்கப்பட உள்ளதாம். 

முன்னாள் தொழில்நுட்பத்தை இந்நாள் தொழில்நுட்பத்தின் மூலம் ஏலத்தில் விடுவதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளது வோடோபோன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com