சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத உலகின் முதல் ரயில்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத உலகின் முதல் ரயில்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத உலகின் முதல் ரயில்
Published on

சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் ரயிலின் சோதனை ஓட்டம் ஜெர்மனியில் நடந்தது.

ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் இந்த ரயிலுக்கு கோராடியா ஐலிண்ட் ரயில் (Coradia iLint train) என்று பெயரிட்டுள்ளனர். ஜெர்மனியைச் சேர்ந்த அல்ஸ்டாம் (Alstom) நிறுவனம் இந்த ரயிலினை வடிவமைத்துள்ளது. இதன் சோதனை ஓட்டம், சால்ஸ்கிட்டெர் பகுதியில் நடந்தது. பயணிகள் இல்லாமல் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில், ரயிலானது மணிக்கு 50 மைல்கள் என்ற நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை எட்டியதாக அல்ஸ்டாம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். கார் எஞ்சினை விட சத்தம் குறைவான இந்த ரயிலின் எஞ்சின், நீராவியை மட்டுமே வெளியேற்றும். அதேபோல, ரயிலில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் மின்கலங்களில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும், இழுவை சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமான ரயில் பாதைகளில் இயக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது, ரயில் போக்குவரத்தின் எதிர்காலத்தை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் என்று அல்ஸ்டாம் நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com