கண்கள் அழும்போது மூக்கிலும் நீர் வெளியாவது ஏன்..?

கண்கள் அழும்போது மூக்கிலும் நீர் வெளியாவது ஏன்..?

கண்கள் அழும்போது மூக்கிலும் நீர் வெளியாவது ஏன்..?
Published on

நம் கண்களின் கீழ் இமைகளில் ஒரு துளை உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?! அப்படியே தெரிந்தாலும் அது எதற்காக படைக்கப்பட்டது என நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அறிவியலில் புரிந்து கொள்வதற்கு மிக கடினமான விஷயமே நம்முடைய உடல் தான். ஏனென்றால் நம் உடலில் எத்தனையோ அதிசயமான அம்சங்கள் நிறைந்துள்ளன.

கண்களின் கீழ் இமைகளின் உள்பகுதியில் இருந்து 2 மில்லிமீட்டர் இடைவெளியில் காணப்படும் துளைக்கு லாக்ரிமல் பன்க்டம் (Lacrimal punctum) என்று பெயர். இது சிலருக்கு சிறியதாகவும் சிலருக்கு கொஞ்சம் பெரியதாகவும் காணப்படுகிறது. இது அழுகையின் போது கண்ணீரை உற்பத்தி செய்ய உதவும் துளை என்று எல்லோரும் நினைத்துக்கொள்வர். ஆனால், நாம் அழும்போது வெளியாகும் கண்ணீர்த்துளிகளை லாக்ரிமல் சாக் (Lacrimal Sac) என்னும் திசுப்பைக்கு அனுப்புவதே இந்த துளைகளின் பிரதான வேலை. இந்த திசுப்பைக்கும் மூக்கிற்கும் இணைப்பு உள்ளது. இதனால் தான் நாம் அழும்போது நமக்கு மூக்கிலிருந்தும் நீர் வெளியாகிறது.

டர்க்கியை சேர்ந்த ஒரு இளைஞர் இந்த துளையில் பாலை ஊற்றி தனது மூக்கினை அடைத்துக்கொண்டு அதே பாலை கிட்டத்தட்ட 9 அடி தூரத்திற்கு பீச்சி அடித்து கின்னஸ் சாதனை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com