இந்த போன்களில் வாட்ஸ் அப் விரைவில் வேலை செய்யாது !

இந்த போன்களில் வாட்ஸ் அப் விரைவில் வேலை செய்யாது !

இந்த போன்களில் வாட்ஸ் அப் விரைவில் வேலை செய்யாது !
Published on

தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் பொருட்டு, வாட்ஸ் அப் நிறுவனம் சில போன்களில் சேவையை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

நாளுக்கு நாள் டெக்னாலஜி வளர்ந்து வரும் நிலையில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகின்றனர். அப்படி ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் செல்போன்களில் முதன்மையாக ஆக்கிரமித்திருப்பது வாட்ஸ்அப். மெசேஜ், ஆடியோ கால், வீடியோ கால் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. ஒரு நாளைக்கு மட்டும் 6000 கோடி மெசேஜ்கள் வாட்ஸ்-அப்பில் பகிரப்படுகின்றன. 

இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் சில ஆப்ரேடிங் சிஸ்டம்களில் தன்னுடைய சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ஆப்ரேடிங் சிஷ்டம்(OS) உள்ள போன்களில் ஏற்கனவே வாட்ஸ் அப் நிறுத்தப்பட்டுள்ளது

  • 1. ஆண்ட்ராய்ட் வெர்சன்ஸ் 2.3.3-க்கும் பழமையானவை
  • 2. விண்டோஸ் போன் 8.0, அதற்கும் பழைய போன்கள்(Android versions older than 2.3.3)
  • 3. ஐபோன் 3ஜிஎஸ்/iOS 6(Windows Phone 8.0 and older)
  • 4. நோக்கியா சிம்பையன் எஸ்60 (Nokia Symbian S60)
  • 5. பிளாக் பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக் பெர்ரி 10 (BlackBerry OS and BlackBerry 10)

வருங்காலத்தில் வாட்ஸ் அப் நிறுத்தப்படவுள்ள ஓஎஸ்

  • 1. நோக்கியா எஸ்40 (Nokia S40) - டிசம்பர் 31, 2018 வரை
  • 2. ஆண்ட்ராய்ட் வெர்சன் 2.3.7 (Android versions 2.3.7) மற்றும் அதற்கு முந்தையது - பிப்ரவரி 1, 2020 வரை
  • 3. ஐஓஎஸ் 7 (iOS 7) மற்றும் அதற்கு முந்தையது - பிப்ரவரி 1, 2020 வரை 

நியூ வெர்சனை அப்டேட் செய்ய வாட்ஸ் அப் கூறியுள்ளவை

  • 1. ஆண்ட்ராய்ட் ரன்னிங் ஓஎஸ் 4.0 (Android running OS 4.0 and above) மற்றும் அதற்கு மேல் 
  • 2. ஐபோன் ரன்னிங் ஐஓஎஸ் 8 (iPhone running iOS 8 and above) மற்றும் அதற்கு மேல் 
  • 3. விண்டோஸ் போன் 8.1 (Windows Phone 8.1) மற்றும் அதற்கு மேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com