அவ்வளவுதான்.. இனிமே இந்த போனில் வாட்ஸ்அப் இயங்காது.. மெட்டா அறிவிப்பு!
ஆண்ட்ராய்டு 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் (OS) இயங்கும் ஸ்மார்ட்போன்களில், வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஐபோன் பயனர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த மாற்றம் ஆண்ட்ராய்டு பயனர்களை மட்டுமே பாதிக்கிறது. ஐபோன்கள் மற்றும் ஐபேடுகள் பாதிக்கப்படாது.
செல்போன்களில் வாட்ஸ் அப் எனும் செயலி இன்றியமையாததாக உள்ளது. இதன்மூலம் டெக்ஸ்ட் மெசேஜ்கள், ஆடியோ மற்றும் வீடியோ கால்கள், உரையாடும் வசதி எனப் பல வசதிகள் உள்ளன. மேலும் இவை தவிர, வாடிக்கையாளர்களை ஈர்க்க வாட்ஸ் அப் செயலி, புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் (OS) இயங்கும் ஸ்மார்ட்போன்களில், வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதற்காக, ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 போன்ற பழைய பதிப்புகளுக்கான ஆதரவை வாட்ஸ்அப் விலக்கிக்கொள்கிறது. அதாவது, ஆண்ட்ராய்டின் முந்தைய பதிப்புகளான ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 பதிப்புகளில் இயங்கும் போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 8 முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை (உதாரணமாக AI வசதிகள்) வழங்க பழைய மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் போதுமானதாக இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயனர்களுக்கு ஏற்கெனவே இதுதொடர்பாக எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு விட்டதாகவும் மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான உரையாடல்கள் மற்றும் மீடியா கோப்புகளை இழப்பதைத் தவிர்க்க, பயனர்கள் தங்கள் அரட்டைகளை பேக்கப் செய்துகொள்ளுமாறும் மெட்டா கூறியுள்ளது.
உங்கள் கைப்பேசி ஆண்ட்ராய்டு 5.0 அல்லது 5.1 பதிப்பில் இயங்கினால், வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்த, உங்கள் மென்பொருளைப் புதுப்பிக்க வேண்டும் (முடிந்தால்) அல்லது புதிய சாதனத்திற்கு மாற வேண்டும். இது வாட்ஸ்அப் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் பிசினஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். அதேநேரத்தில், ஐபோன் பயனர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த மாற்றம் ஆண்ட்ராய்டு பயனர்களை மட்டுமே பாதிக்கிறது. ஐபோன்கள் மற்றும் ஐபேடுகள் பாதிக்கப்படாது. iOS 15.1 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் இயங்கும் சாதனங்களில் வாட்ஸ்அப் தொடர்ந்து செயல்படும்.
