“வாட்ஸ்அப் கோல்டு” கிளிக் பண்ணீடாதீங்க..! - ‘தொட்டா கெட்ட’ பயங்கர வைரஸ்

“வாட்ஸ்அப் கோல்டு” கிளிக் பண்ணீடாதீங்க..! - ‘தொட்டா கெட்ட’ பயங்கர வைரஸ்
“வாட்ஸ்அப் கோல்டு” கிளிக் பண்ணீடாதீங்க..! - ‘தொட்டா கெட்ட’ பயங்கர வைரஸ்

வாட்ஸ்-அப் கோல்டு எனப் பரவும் அப்டேட் என்ற போலி லிங்கை கிளிக் செய்தால் கடும் வைரஸ் ஸ்மார்ட்பொனை பாதிக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

தற்போதைய காலக் கட்டத்தில் செல்போன் இன்றி வாழ்பவர்களை பார்ப்பது கடினம். சிட்டி முதல் பட்டி-தொட்டி வரை செல்போன் பரவிக்கிடக்கிறது. ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் ஊரில் ஒரு சிலர் கூட இல்லை. இதேபோன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவருமே வாட்ஸ்-அப் பயன்படுத்துகின்றார்கள் என்று கூறலாம். வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பிக்கொள்வது, வாட்ஸ்-அப் குரூப்பில் உரையாடுவது என ஒரே நாளில் மணிக்கணக்கான நேரங்களை அதில் இளைஞர்கள் உட்பட அனைவரும் செலவிடுகின்றனர்.

இந்தியாவில்தான் அதிகமானோர் மொபைல் வாட்ஸ்-அப் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதும், அதிகளவு நேரத்தை செலவழிப்பதும் தெரியவந்ததுள்ளது. இந்தியர்கள் 98 சதவிகிதம் மொபைல் வாட்ஸ் அப் செயலி மூலமும், 2 சதவிகிதம் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் தகவல் பரி‌மாற்றம் செய்துகொள்கின்றனர். சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதிலும் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. இத்தகைய வாட்ஸ்அப் என்பது வெறும் பயன்பாடாக இல்லாமல், நமது போன் மூலம் ஆபத்துகளையும் விளைவிக்கக் கூடியதாக உள்ளது என்பதே உண்மை. 

அவ்வாறு அண்மையில், பரவும் ஒரு பிரச்னை தான் ‘வாட்ஸ்அப் கோல்டு’ என்ற அப்டேட் லிங்க். அதாவது ‘வாட்ஸ்அப் கோல்டு’ என்ற ஒரு லிங்க் வாட்ஸ்-அப் மூலம் பரவி வருகிறது. அதனுடன், ‘பெரும் பிரபலங்கள் மட்டும் பயன்படுத்தும் வாட்ஸ்-அப் கோல்டு என்ற அப்டேட் தற்போது கசிந்துள்ளது. இதனை அப்டேட் செய்தால், நாம் தனிச்சிறப்பு வசதிகள் பலவற்றை வாட்ஸ்-அப்பில் பெறமுடியும்’ என்ற வாசகமும் அனுப்பப்படுகிறது. இதனைக்கண்டு லிங்க் மூலம் அப்டேட் செய்ய முயற்சிக்கும் நபர்களின் செல்போன்களில் வைரஸ்கள் ஊடுறுவுகின்றன. 

அந்த வைரஸ் மூலம் வைரஸை பரப்பி நபர்கள் உங்கள் வாட்ஸ்-அப் உரையாடல்களை கண்காணிக்க முடியும். அதன்பின்னர் உங்கள் தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களை வைத்து நீங்கள் மிரட்டப்படலாம். மேலும் உங்கள் போனிலும் ஊடுறுவும் அந்த வைரஸ், உங்கள் டிஜிட்டல் வங்கி செயலிகளின் பாஸ்வேர்டுகளையும் திருடும். இதனால் நீங்கள் பண மோசடிக்கு ஆளாக்கப்படுவீர்கள். எனவே இதுபோன்ற வாட்ஸ்-அப் லிங்குகளை தயவு செய்து கிளிக் செய்துவிடாதீர்கள் என வாட்ஸ்-அப் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வைரஸ் இதற்கு முன்னரே 2016ல் வேறு பெயரில் பகிரப்பட்டது. தற்போது வாட்ஸ்-அப் கோல்டு என்ற புதிய பெயரில் பகிரப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com