வாட்ஸ் அப் பீட்டா வெர்சனின் புதிய அப்டேட்! தகவல்கள் அழியும் அபாயம்!

வாட்ஸ் அப் பீட்டா வெர்சனின் புதிய அப்டேட்! தகவல்கள் அழியும் அபாயம்!
வாட்ஸ் அப் பீட்டா வெர்சனின் புதிய அப்டேட்! தகவல்கள் அழியும் அபாயம்!

வாட்ஸ் அப் பீட்டா வெர்சனின் புதிய அப்டேட்டால் தகவல்கள் அனைத்தும் அழியும் சிக்கல் உருவாகி இருக்கிறது.

வாட்ஸ் அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியை கடந்த 2014-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதிலும் 1.3 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது வாட்ஸ் அப் அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. 

இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் பீட்டா வெர்சனில் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அப்டேட்டில் பக் இருப்பதால் போட்டோக்கள் உட்பட சில மீடியா ஃபைல்கள் தானாகவே அழிவதாகவும் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டின் வாட்ஸ்அப் 2.19.66 பதிப்பில் இந்த குறைபாடு இருக்கிறது. மேலும் நண்பர்களின் சில ஸ்டேட்டஸில் உள்ள புகைப்படம் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது வாட்ஸ் அப்பில் சோதனை தளமான பீட்டா வெர்சனில் மட்டுமே வருகிறது. இந்த குறைபாடு முழுமையாக சரி செய்யப்பட்டே அதிகாரப்பூர்வ அப்டேட்டாக விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எந்த ஒரு அப்டேட்டையும் முதலில் பீட்டா வெர்சன் என்ற சோதனை தளத்தில் பரிசோதிப்பார்கள். அது முழுமையாக வெற்றியடைந்தால் மட்டுமே அனைத்து தளங்களிலும் அதிகாரப்பூர்வமாக அப்டேட் விடப்படும். அதனால் சோதனை தளத்தில் குறைபாடுகள் வருவது சகஜமானது தான் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com