வாட்ஸ்அப் செயலி‌யில் புது நடவடிக்கை... ஏன் தெரியுமா..?

வாட்ஸ்அப் செயலி‌யில் புது நடவடிக்கை... ஏன் தெரியுமா..?

வாட்ஸ்அப் செயலி‌யில் புது நடவடிக்கை... ஏன் தெரியுமா..?
Published on


வாட்ஸ்அப் செயலி‌யில் புதிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று பிற நாடுகளில் தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் தற்போது வரை 33,976 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 7,22,088 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் மக்களிடம் ஆன்லைன் பயன்பாடானது முன்பை விட அதிகரித்துள்ளது. இதில் கொரோனா குறித்த தவறான செய்திகள், அச்சுறுத்தும் கொரோனா புகைப்படங்கள்
போன்றவற்றை சிலர் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அண்மையில் மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பும் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் செயலி‌யில் வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேர அளவு குறைக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப ரீதியிலான சிக்கல்களை சமாளிப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவை குறைத்துள்ளது. ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவு 30 வினாடி வரை வைக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது 15 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ள‌து. வாட்ஸ்அப் சர்வர் தங்குதடையின்றி இயங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com