“அதுமட்டும் நடந்தால் நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறதான் வேண்டும்” - வாட்ஸ்அப்

பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இந்தியாவை விட்டு வெளியேறதான் செய்ய வேண்டும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்puthiya thalaimurai

இந்திய தொழில்நுட்பத்துறையின் விதிகளை மீறி வாட்ஸ்அப் நிறுவனம் செயல்படுவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

அப்போது, “வாட்ஸ்அப் நிறுவனம் கையாளும் தனியுரிமை பாதுகாப்பு அம்சமான என்ட் டூ என்ட் என்ஸ்கிரிப்ட்-ஐ நீக்க வேண்டும். இது ஒரு செய்தி எவ்வாறு பரவுகிறது என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுத்துகிறது” என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

வாட்ஸ்அப்
அசாம் | “பாஜகவுக்கு ஓட்டு போடாவிட்டால் புல்டோசர் வரும்” என மிரட்டிய வனத்துறை... மக்கள் புகார்!

இதற்கு பதிலளித்த வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என இந்திய அரசு நிர்ணயித்தால், இந்தியாவை விட்டு வாட்ஸ்அப் வெளியேறதான் வேண்டும். அவ்வாறு வெளியேறினால் 40 கோடி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர்” என்று அவர் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com