அதிகமுறை பகிரப்படும் தகவல்கள்: 70% குறைந்ததாக வாட்ஸ் அப் அறிவிப்பு

அதிகமுறை பகிரப்படும் தகவல்கள்: 70% குறைந்ததாக வாட்ஸ் அப் அறிவிப்பு

அதிகமுறை பகிரப்படும் தகவல்கள்: 70% குறைந்ததாக வாட்ஸ் அப் அறிவிப்பு
Published on

வாட்ஸ் அப் செயலியில், அதிக முறை அனுப்பப்பட்ட செய்திகள் பகிரப்படுவது 70% குறைந்துள்ளது.

வாட்ஸ்அப் எந்த அளவுக்கு ஒரு தகவலை பகிர்ந்து கொள்ள உதவியாக இருக்கிறதோ அதே அளவுக்கு வதந்திகளும் பரவுகிறது. இதனை தடுக்க வாட்ஸ்அப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி,

கொரோனா வைரஸ் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் பகிரப்படுவதை குறைக்கும் வகையில் கடந்த 7 ஆம் தேதி வாட்ஸ் அப் புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தியது. அதன்படி, பயனர்களால் அதிக முறை அனுப்பப்பட்டதாக கண்டறியப்படும் செய்திகளை, ஒரேநேரத்தில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்ற வசதி நடைமுறைக்கு வந்தது. கொரோனா தொடர்பாக போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த நடவடிக்கை மேற்கொண்டது.

இதனால், அந்த வகையிலான தகவல்கள் பகிரும் விகிதம் 70% குறைந்துள்ளதாக வாட்ஸ் அப்பை நிர்வகித்து வரும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com