Safety Overviewfb
டெக்
Safety Overview என்ற புதிய அம்சத்தை உருவாக்கிய வாட்ஸ்அப்!
டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், Safety Overview என்ற ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், சந்தேகத்திற்கிடமான குழுக்களில் சிக்குவதை தவிர்க்க Safety Overview என்ற ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இந்த வாரம் அறிமுகமாகும் இந்த பாதுகாப்பு அம்சத்தால், பயனர்களுக்கு தொடர்பில்லாத நபர் ஒரு புதிய குழுவில் சேர்த்தால், அந்த குழு பற்றிய தகவல்களுடன் எச்சரிக்கை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம், குழுவை ஓபன் செய்யாமலேயே வெளியேற வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மோசடிகளை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மட்டும் 68 லட்சம் போலி கணக்குகளை தடை செய்துள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. கம்போடியா போன்ற நாடுகளில் செயல்படும் organized scam மையங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.