வாய்ஸ் மெசேஜ் போலவே.. இனி வீடியோ மெசேஜிங் பண்ணலாம்.. - வாட்ஸ் அப்பில் அடுத்த அப்டேட்!

வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதைப் போன்று, இனி வீடியோ மெசேஜ் அனுப்பும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
WhatsApp
WhatsAppFile Photo

உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள மெட்டாவின் வாட்ஸ் அப் நிறுவனம், அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை அறிமுகம் செய்து தனது பயனர்களை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அந்த வகையில், வாட்ஸ் அப்பின் சமீபத்திய பீட்டா பதிப்பில், வீடியோ மெசேஜிங் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

WhatsApp
WhatsApp

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் வாட்ஸ்அப் வழியாக 60 வினாடிகள் வரை குறுகிய வீடியோக்களை பகிரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பு வாட்ஸ் அப்பில் டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே இருந்த நிலையில், அதன்பிறகு வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வாய்ஸ் மெசேஜ்க்கு பதிலாக வீடியோ மெசேஜிங் அனுப்ப முடியும். இந்த அம்சம் தற்போது வாட்ஸ் அப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா டெஸ்டர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது சோதனைக் கட்டத்தில் இந்த அம்சம் உள்ளது. படிப்படியாக அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் நடைமுறைக்கு வரவுள்ளது.

பயனர் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த புதிய வீடியோ மெசேஜ் அம்சமும் எண்டு-டூ-எண்ட் என்கிரிப்ட் செய்யப்பட்டவை. அதனால் அனுப்புநர் மற்றும் பெறுநருக்கு இடையே நடக்கும் உரையாடலை அதற்கு தொடர்பில்லாத யாரும், அதாவது வாட்ஸ் அப் நிறுவனம் கூட அணுக முடியாது. இந்த வீடியோ மெசேஜை யாருக்கும் பகிர முடியாது. வேண்டுமெனில், வீடியோ மெசேஜை ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் சேமிக்க முடியும்.

WhatsApp
WhatsApp

எப்படி பயன்படுத்துவது?

வாட்ஸ் அப்பில் வீடியோ செய்தியை அனுப்ப விரும்பும் நபருடைய சேட் பாக்ஸுக்கு செல்ல வேண்டும். அங்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பும் பாக்ஸின் வலதுபுறத்தில் உள்ள மைக்ரோஃபோன் பட்டனை பயன்படுத்த வேண்டும். அந்த மைக்ரோஃபோன் பட்டன் வீடியோ பட்டனாக மாற்ற ஆப்ஷன் கேட்கும். அதன்மூலம் பயனர்கள் குறுகிய வீடியோ செய்திகளை அனுப்பத் தொடங்கலாம். இந்த அம்சத்தை அணுக விரும்பும் ஐஓஎஸ் பயனர்கள், 23.6.0.73 வெர்ஷனையும், ஆண்ட்ராய்டு பயனர்கள் 2.23.8.19 வெர்ஷனையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் அதன் பிறகு இந்த வீடியோ மெசேஜிங் வசதியை நம்மால் பயன்படுத்த முடியும். ஸ்னாப்சாட்டில் உள்ள வீடியோ மெசேஜ் அம்சம் போன்று வாட்ஸ்அப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com