வாட்ஸ் அப் புதிய அப்டேட்.. ஆவணங்களை ஸ்கேன் செய்யும் முறை அறிமுகம்

வாட்ஸ் அப் செயலில் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை ஈர்க்க வாட்ஸ் அப் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் மூன்றாம் தரப்பு செயலிகளை ஸ்கேனிங்கிற்கு பயன்படுத்த தேவையில்லை. வாட்ஸ் அப்பில் ஸ்கேன் செய்து அப்படியே ஆவணங்களை அனுப்பலாம்.

முதல்கட்டமாக IOS பயனர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com