வாட்ஸ்அப்-ஐ மிஞ்சிய ஃபேஸ்புக் மெசஞ்ஜர்

வாட்ஸ்அப்-ஐ மிஞ்சிய ஃபேஸ்புக் மெசஞ்ஜர்

வாட்ஸ்அப்-ஐ மிஞ்சிய ஃபேஸ்புக் மெசஞ்ஜர்
Published on

உலகளவில் ஃபேஸ்புக் மெசஞ்ஜர் ஒரு மாதத்திற்கு 1.3 பில்லயன் மக்களுக்கும் மேல் பயன்படுத்துகின்றனர் என ஃபேஸ்புக்​ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஃபேஸ்புக் மெசஞ்ஜரில் மேலும் சில சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

புதிய அம்சங்களால் மக்களிடையே அதிகளவு பிரபலமடையும் மேலும் ஒரு சிறந்த தகவல் அனுப்பும் அல்லது ஷேர் செய்யும்  ஆப்-ஆக ஃபேஸ்புக் மெசஞ்ஜர் அமையும். வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்கள் பெரும்பாலும் ஃபேஸ்புக் மெசஞ்ஜரையும் பயன்படுத்துகின்றனர். எனவே இரண்டும் முன்னேற்ற பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் வாட்ஸ்அப்-ஐ விட ஃபேஸ்புக் மெசஞ்ஜரை வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, மெசஞ்ஜர் லைட் மற்றும் இன்பாக்ஸ் உள்ளிட்ட புதிய வசதிகளையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

மாதத்திற்கு 700 மில்லியன் மக்கள் மட்டுமே இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். எனவே மற்ற ஆப்களை விட ஃபேஸ்புக் மெசன்ஜரை பயன்படுத்துவோர் அதிகளவு இருப்பதால் இதற்கு நன்றி தெரிவித்த ஃபேஸ்புக், மேலும் பல வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com