தினமும் 1 பில்லியன் அழைப்பு... 12 ஆண்டுகளை நிறைவு செய்தது வாட்ஸ்அப்!

தினமும் 1 பில்லியன் அழைப்பு... 12 ஆண்டுகளை நிறைவு செய்தது வாட்ஸ்அப்!
தினமும் 1 பில்லியன் அழைப்பு... 12 ஆண்டுகளை நிறைவு செய்தது வாட்ஸ்அப்!

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைவரும் சிம்பிளாக சேட் செய்ய உதவுகிறது சமூக ஊடகமான வாட்ஸ்அப் செயலி. டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, காலிங் என சகல வசதிகளும் அடங்கிய சூப்பரான அப்ளிகேஷன் இது. குறிப்பாக தனி நபராகவும், குழுவாகவும் சேட் செய்ய வாட்ஸ் அப் உதவி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயணத்தில் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2009-இல் இதே பிப்ரவரி மாதத்தில் வாட்ஸ்அப் உதயமாகி உள்ளது. அன்று முதல் இன்று வரையில் உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் பயனர்களை தன்வசம் வசியம் செய்து வைத்துள்ளது வாட்ஸ்அப். 

தினந்தோறும் 100 பில்லியன் மெசேஜ்களும், 1 பில்லியன் கால்களும் வாட்ஸ்அப் தளத்தில் பதிவாவதாக புள்ளி விவரங்களையும் இந்த தருணத்தில் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இதனுடன் பிரைவசி பாலிசி குறித்தும் தனது பயனர்களுக்கு வாட்ஸ்அப் தெளிவு கொடுத்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் 2014-இல் ஃபேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com