வாட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றலாம்!

வாட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றலாம்!

வாட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றலாம்!
Published on

வாட்ஸ்-அப் தற்போது தனது புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 
உலகளவில் தற்போது புதிய டிரெண்டாக உருவெடுத்து வரும் வாட்ஸ் அப் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை தருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ் அப்பில் உள்ள எமோஜி சேவையை தற்போது புது விதமாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே உள்ள ​எமோஜியை விட மேலும் பல எமோஜிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது நாம் என்ன எமோஜி வேண்டும் என நனைக்கிறோமோ அதை டைப் செய்தால் நமக்கு தேவையான எமோஜிகளை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் நாம் டைப் செய்யும் எழுத்துகளை தேர்வு செய்து போல்ட் (bold), இட்டாலிக் (italic), and ஸ்டிரைக்த்ரோ (strikethrough)  உள்ளிட்ட வகையில் எழுத்துக்களை மாற்றும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக, வாட்ஸ்-அப்பில் எம்.பி.3, இ-மெயில் உள்ளிட்ட அனைத்து விதமான ஃபைல்களையும் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com