வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!

வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!

வாட்ஸ்அப் குரூப்களில் இரண்டு புதிய அப்டேக்களை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாட்ஸ்அப் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் குழுக்களுக்கு இரண்டு அம்சங்களை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் குழு அட்மின்களுக்கு ஒரு சிறப்பு அதிகாரத்தை வழங்கியது. இதன் மூலம் குழுவில் உறுப்பினர்கள் பகிரும் எந்த செய்தியையும் அட்மின்கள் நீக்க முடியும். இந்நிலையில் குரூப்களில் மேலும் இரண்டு புதிய அப்டேக்களை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

முதல் அப்டேட்:

முதல் அப்டேட் பயனர்களை சத்தமில்லாமல் குழுக்களிலிருந்து வெளியேற அனுமதிக்கும் அம்சமாகும். இதன்மூலம் நீங்கள் ஒரு குழுவில் இருந்து வெளியேறினால், அந்த தகவல் குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தாமல், குழுவின் அட்மினுக்கு மட்டுமே தெரியப்படுத்தப்படும். "சைலண்ட் க்ரூப் எக்சிட்" (Silent Group Exit) என்ற இந்த அம்சம் டெஸ்க்டாப் பதிப்பில் முதலில் அறிமுகம் ஆகவுள்ளது.

2வது அப்டேட்:

வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் காணப்பட்ட இந்த அம்சம், கடந்த காலத்தில் வாட்ஸ்அப் குழுவில் இருந்த அனைவரையும் பார்க்க அனுமதிக்கும். View Past Participants என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இதன்மூலம் கடந்த காலத்தில் குரூப்பை விட்டு வெளியேறியவர்கள் யார் என்பதைக் கண்டறிய உதவும். ஆனால், அமைதியான குழுவை விட்டு வெளியேறும் முதல் அப்டேட்டை இது கேள்விக்கு உள்ளாக்குகிறது.

குழுவின் பழைய பங்கேற்பாளர்களைப் பற்றி யாராவது தெரிந்து கொள்ள விரும்பினால், குழுவின் சுயவிவரப் பகுதியைப் பார்வையிடுவதன் மூலம் ஒருவர் அதைச் செய்ய முடியும். View Past Participants என்ற ஆப்ஷனில் அதை பார்க்கலாம். ஆனால் குழுவின் அட்மின்கள் நினைத்தால் இந்த ஆப்ஷனை உறுப்பினர்கள் பயன்படுத்துவதை தடுக்க இயலும் வசதியும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த 2 அப்டேட்களும் எப்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்பதை வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com