QR Code மூலம் மொத்த சாட்டையும் வேகமாக ஷேர் செய்யலாம்! வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ள ஈசி ஸ்டெப்!

உங்களுடைய வாட்ஸ்அப் சாட்களை இரண்டு மொபைல்களுக்கு இடையில் இனி எளிதாகவும், விரைவாகவும் வாட்ஸ்அப் மூலமாகவே பகிர்ந்துகொள்ளும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
WhatsApp Chat Share
WhatsApp Chat ShareTwitter

மெட்டா சிஇஒ மார்க், வாட்ஸ்அப்பில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி அது உங்கள் மொத்த WhatsApp சாட்டையும் Cloud-ல் பதிவேற்றாமல் மொபைல்களுக்கு இடையிலேயே ஷேர் செய்துகொள்ள அனுமதிக்கிறது.

புதிய அம்சத்தின் பயன் என்ன?

சில பயனாளர்கள் பல வருடங்களாக பயன்படுத்திய சாட்களை அப்படியே சேமித்து வைத்திருக்க நினைப்பார்கள். சிலர் தங்களது மெசேஜ் சாட்கள், 2 போன்களில் இருக்க வேண்டாம் எனவும் நினைப்பார்கள். அதையும் மீறி சாட்களின் பேக்கப்பை ஷேர் செய்ய நினைக்கும் பயனாளர்கள், மொபைல் நெட்வொர்க்கில் ஸ்லோவாக இருக்குமே என்ற மலைப்பில் கூட இருப்பார்கள். இதிலும் புதிய மொபைல் போன்களை வாங்கும் பயனர்கள், எப்படி பழைய போனிலிருக்கும் சாட்களை அப்படியே புதிய போனிற்கு ஷேர் செய்வது என்ற குழப்பத்திலும் இருப்பார்கள்.

இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கும் இந்த புதிய அம்சமானது, விரைவாகவும் எளிதாகவும் உங்கள் சாட் ஹிஸ்டிரியை ஷேர் செய்ய அனுமதிக்கிறது. அதன்படி பேக்கப் செய்யாமல், கூகுள் டிரைவ் பயன்படுத்தாமல், வாட்ஸ்அப்பிலிருந்தே ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு QR கோட் மூலம் மொத்த சாட்டையும் ஷேர் செய்து கொள்ளலாம். இதன் அப்டேட்டை வாட்ஸ்அப் முன்னரே அறிவித்திருந்தாலும், அதை விரைவாக எப்படி செய்வது என்ற அம்சத்தை தான் தற்போது அறிவித்துள்ளது.

எப்படி Chat-ஐ விரைவாக ஷேர் செய்துகொள்ள முடியும்?

1. இரண்டு மொபைல் போன்களிலும், Wi-Fi இணைக்கப்பட்டுள்ளதையும், லொக்கேஷன் இயக்கப்பட்டிருப்பதையும் உறுதிசெய்யவேண்டும்.

2. பின்னர் உங்கள் பழைய போனின் Settings > Chats > Chat transfer என்பதற்கு சென்று QR ஷேருக்கு செல்லவேண்டும்.

3. QR கோடை ஸ்கேன் செய்யதவுடன், இரண்டு போன்களுக்கும் இடையே இடமாற்றம் உடனே தொடங்கி விரைவாகவே முடிந்துவிடும்.

அடுத்ததாக அதிக க்வாலிட்டி உடைய வீடியோவை இனி வாட்ஸ்அப்பில் எந்த கட்டுப்பாடும் இன்றி ஷேர் செய்யும் அம்சத்தை வெளியிட செயல்பட்டுவருகிறது வாட்ஸ்அப்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com