வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ’போட்டோ பன்ட்லிங்’

வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ’போட்டோ பன்ட்லிங்’
வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ’போட்டோ பன்ட்லிங்’

என்னதான் ஃபேஸ்புக் மெசென்ஜர், ஹைக், டெலகிராம் போன்ற சாட் அப்ளிகேஷன்கள் இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் பிரசித்திபேற்றது வாட்ஸ் அப் மட்டுமே. அத்தகைய சிறப்பு பெற்ற வாட்ஸ் அப்பில் சில புதிய அப்டேடுகள் வந்துள்ளன.

ஆசியா கண்டத்தில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தும் மொபைல் அப்பாக, வாட்ஸ்அப் முன்னேறி வருகிறது. இதனால் சமீபகாலமாக வாட்ஸ்அப்பில் பல வசதிகளை அந்நிறுவனம் அப்டேட் செய்து வருகிறது. தற்போது வாட்ஸ்அப்பில் புகைப்படங்களை ஒவ்வொன்றாக தான் அனுப்ப முடியும். ஆனால் தற்போது ஃபேஸ்புக்கில் உள்ளது போன்று போட்டோக்களை பண்டலாக அனுப்பக்கூடிய வகையில் அப்டேட் ஆகியுள்ளது. புதிய அப்டேட் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை அடுத்தடுத்து அனுப்பும்போது அவற்றை இணைத்துக்கொடுக்கும் ’போட்டோ பன்ட்லிங்’ என்ற புதிய அம்சம் புகுத்தப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப் கால்களின் தோற்றமும் மாறியுள்ளது. இதுவரை இடப்புறத்திலிருந்து வலபுறமாகவே வாட்ஸ்அப் கால்களை அட்டன் செய்ய முடியும். ஆனால் தற்போது கீழிருந்து மேலாக கால்களை அட்டன் செய்யலாம். இளைஞர்கள் மத்தியில் ’போட்டோ பன்ட்லிங்’ வசதி அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து வகை பைல்களும் இனி வாட்ஸ்அப் மூலமாக ஷேர் செய்ய முடியும் என்றும், ஆன்ட்ராய்டு, விண்டோஸ், ஐஃபோன் ஆகியவற்றிலும் இந்த அப்டேட் வேலை செய்யும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com