டெக்
பணப்பட்டுவாடா சேவையில் நுழையும் வாட்ஸ்அப் - ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கேட்டு கடிதம்
பணப்பட்டுவாடா சேவையில் நுழையும் வாட்ஸ்அப் - ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கேட்டு கடிதம்
வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடையே பணம் அனுப்புதல் மற்றும் பெறும் சேவையை வழங்க ரிசர்வ் வங்கியிடம்
ஒப்புதல் கேட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள தனது 20 கோடி வாடிக்கையாளர்களுக்கு பணப்பட்டுவாடா சேவை வழங்க ஒப்புதல் தருமாறு வாட்ஸ்அப்
நிறுவன தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் ரிசர்வ் வங்கிக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் தனது சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சோதனை ரீதியில்
பணப்பட்டுவாடா சேவை வழங்கி வந்தது. இதில் திருப்திகரமான முடிவுகள் கிடைத்ததை தொடர்ந்து முழுமையான சேவையை
தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது