7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்...வாட்ஸ் அப்பில் புதிய அம்சம்

7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்...வாட்ஸ் அப்பில் புதிய அம்சம்
7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்...வாட்ஸ் அப்பில் புதிய அம்சம்

அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் 7 நாட்களில் தானாக மறைந்துவிடும் அதாவது டெலிட் ஆகிவிடும் அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட செய்தி மற்றும் குரூப்புகளிலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் அதன் ஆதரவு ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு முன்பு அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகளை இந்த அம்சம் பாதிக்காது எனவும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த அம்சத்தை பயனர் ஒரு தனிப்பட்ட சாட்டிற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். குரூப் செய்திகளுக்கு, அட்மின் மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்தமுடியும். ஒரு பயனர் 7 நாட்கள் தங்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தவில்லை என்றால், அந்த செய்தி அழிந்துவிடும். எனினும், நோட்டிஃபிகேஷனில் அந்த செய்தி காண்பிக்கப்படலாம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

பெறப்படும் செய்திகளில் புகைப்படங்கள் தானாக டவுன்லோட் ஆகும். செய்திகள் தானாக மறைந்துவிடும்(disappearing messages)அம்சத்தை ஆன் செய்யும்போது, ஆட்டோ- டவுன்லோட் ஆனில் இருந்தால், செய்திகள் அழிந்தாலும், புகைப்படங்கள் போனில் டவுன்லோட் ஆகியிருக்கும். செய்திகள் மறைக்கப்படும் அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்கும் சாட்டிலிருந்து அந்த அம்சம் ஆன் செய்யப்படாத மற்றொரு சாட்டிற்கு ஒரு செய்தியை ஃபார்வேர்டு செய்தால் அந்த செய்தி அப்படியே இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com