டெக்
Chandrayaan 3 கால்பதித்ததும் லேண்டர், ரோவர் என்ன செய்யும்?
சந்திரயான் 3ன் லேண்டர் மற்றும் ரோவரை வைத்து 7 ஆய்வுகளை நடத்த இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிரங்க இருக்கும் நிலையில் சந்திரயான் 3ன் லேண்டரோடு சந்திரயான் 2ன் ஆர்பிட்டருக்கு தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தை பொறுத்தவரையில் நிலவில் பத்திரமாக தரையிறங்க வேண்டிய பொறுப்பு லேண்டருடையது. அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது ரோவருடையது.