சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ் web

இயல்பு நிலைக்கு திரும்ப ஓராண்டு காலம் ஆகலாம்.. சுனிதா பூமியில் சந்திக்கப்போகும் சவால்கள்!

விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய பின் இயல்பு நிலையை அடைய ஓராண்டு வரை ஆகக்கூடும் என விஞ்ஞானிகள தெரிவித்துள்ளனர்.
Published on

விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய பின் இயல்பு நிலையை அடைய ஓராண்டு வரை ஆகக்கூடும் என விஞ்ஞானிகள தெரிவித்துள்ளனர்.

என்னென்ன பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்?

விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் வீரர்களின் எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும் என்பதால், அவர்களின் உடல் குழந்தைகளின் உடல் போல
மிகவும் மென்மையாக மாறியிருக்கும். இதனால் தரையில் இயல்பாக கால் ஊன்றி நடப்பதில் சிக்கல் எழும்.

பார்வைத் திறன் பாதிப்பில் தொடங்கி கதிரியக்க தாக்கத்தால் செல்கள், ரத்த அணுக்கள் பாதிப்பு வரை பூமியில் அவர்கள் சந்திக்க வேண்டிய சவால்களை விஞ்ஞானிகள் பட்டியலிட்டுள்ளனர். அதன்படி பூமிக்கு திரும்பும் விண்வெளி வீரர்களுக்கு தலைசுற்றல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். இந்த பாதிப்புகள் சரியாக மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

9 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பூமி திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளை மாலை 6 மணியளவில் சுனிதா பூமிக்கு வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com