எப்படியெல்லாம் யோசிக்குறாங்க.. ஏடிஎம் கார்டு வடிவில் திருமண அழைப்பிதழ்
விதவிதமாக கல்யாண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்படும் இந்த காலத்தில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் திருமண அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் அச்சடிப்பது தற்போது வழக்கமாகி வருகிறது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மக்களிடமும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாக திருமண அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் அச்சடிப்பது வழக்கமாகி வருகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் முக்கியதுவத்துவம் குறித்து மக்களிடம் கொண்டு சேர்க்க இதுமாதிரியான புது விசயங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இந்த ஏ.டி.எம் கார்டு வடிவிலான திருமண அழைப்பிதழ்கள் எளிய வகையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் மணமக்களின் பெயர்கள், கல்யாண தேதி, இடம் ஆகிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது. இது மாதிரியான அழைப்பிதழைப் பார்த்து திருமண வீட்டாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.