தொலைதொடர்பு நிறுவனமான வோடஃபோன் தங்களது போஸ்ட்பெயிட் ரெட் பிளான் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட இலவச நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளில் முன்னணியில் இருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். வோடஃபோன் ரெட் ப்ளானில் ரூ.499 முதல் அதிகபட்சமாக ரூ.2,999 வரையிலான பிளான்களை வோடஃபோன் வழங்கி வருகிறது. இந்நிலையில் ரூபாய் 1299 முதல் அதற்கு மேற்பட்ட ப்ளான்களை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஒரு வருடத்திற்கு சந்தா இலவசமாக வழங்க இருக்கிறது.
ரெட் 1299 ப்ளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் உட்பட 20 ஜிபி டேட்டா, வெல்கம் சலுகையாக 30ஜிபி டேட்டா, 100 இலவச மெசேஜ்கள், திட்டத்தைப் பொறுத்து 500 ரூபாய் கிரெடிட் பேலன்ஸ் மற்றும் ஒரு வருடத்திற்கு இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் சந்தா பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் பிளான் வாடிக்கையாளராக இருந்தால் Netflix' to 199 என்ற எஸ்எம்எஸ் வாயிலாகவோ அல்லது shop.vodafone.in வாயிலாக பெறலாம். வோடஃபோன் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.500, ரூ.600, மற்றும் ரூ.800 ஆகிய திட்டங்களை வழங்குகின்றது. இவற்றில் ரூ.800 திட்டம் மட்டுமே ஹெச்டி பிளானை பெறும் வசதி உள்ளது.
மேலும் வோடஃபோன் ரெட்ஷீல்ட் வாயிலாக ரூ.50,000 மதிப்பிலான இன்ஷூரன்ஸ் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் வோடஃபோன் தவிர வீடியோகான், D2h மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து சேவையை வழங்கு வருவது குறிப்பிடத்தக்கது.