டெக்
இந்தியாவில் அறிமுகமானது விவோ Y53s - சிறப்பம்சங்கள் என்ன?
இந்தியாவில் அறிமுகமானது விவோ Y53s - சிறப்பம்சங்கள் என்ன?
இந்திய செல்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது விவோ நிறுவனத்தின் Y53s ஸ்மார்ட் போன். ரியல்மி நோட் 10 புரோ மேக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி M51 மாடல்களுக்கு போட்டியாக இந்த போன் இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்?
ரியர் சைடில் மூன்று கேமரா மற்றும் வாட்டர் நாட்ச் டிஸ்பிளே என சிறப்பம்சங்களில் அசத்துகிறது இந்த போன். இந்த லேட்டஸ்ட் மாடல் போனில் 64MP பிரைமரி கேமரா, 128GB ஸ்டோரேஜ் வசதி, 5000mAh பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்ட் 11 பேஸ்ட் ஃபன் டச் IS 11.1 மாதிரியானவை இதில் இடம்பெற்றுள்ளது.
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் இந்த போன் கிடைக்கும். இரண்டு வண்ணங்களில் இப்போது இந்த போன் வெளியாகி உள்ளது.

