இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமான விவோ Y21 போனின் சிறப்பம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது விவோ நிறுவனத்தின் Y21 மாடல் போன். வாட்டர்டிராப் - ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரண்டிலும் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.
சிறப்பம்சங்கள்!
இந்த போன் ஆண்ட்ராய்ட் 11-இல் இயங்குகிறது. 6.5 இன்ச் HD டிஸ்பிளே, 4ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், பின்பக்கத்தில் டியூயல் கேமரா, முன்பக்கத்தில் 8 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா, டைப் சி சார்ஜிங் போர்ட், டியூயல் 4ஜி நேனோ சிம், மீடியாடெக் ஹீலியோ பி 35 (எம்டி 6765) புரோஸசர், 5,000 mAh பேட்டரி மாதிரியானவை இதில் இடம் பெற்றுள்ளன. இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது இந்த போன்.
விரைவில் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டும் அறிமுகமாகம் உள்ளதாம். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களும் கொடுக்கப்படுகின்றன.