உலகிலேயே முதன்முறையாக 120 வாட் திறன் கொண்ட அதிவேக சார்ஜரை விவோ நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய பிரச்னையே சார்ஜ் தீர்ந்துவிடுவதுதான். எவ்வளவுதான் விலையுயர்ந்த போனாக இருந்தாலும், அதில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும் சார்ஜர் பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில் பிரபல சீன நிறுவனமான விவோ, 120 வாட் திறன் கொண்ட அதிவேக சார்ஜரை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் 4000 MAH திறன் கொண்ட பேட்டரியை வெறும் 13 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்ய முடியும். 5 நிமிடங்களில் 50 சதவிகிதம் சார்ஜ் ஏறுகிறது.
ஜூன் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதிவரை ஷாங்காயில் நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் விவோவின் இந்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முன்னதாக, சியோமி நிறுவனம் 100 வாட் திறன் கொண்ட சார்ஜர்களை அறிமுகம் செய்தது. ஆனால் தற்போது விவோ 120 வாட் மின்சக்தியை கொண்ட சார்ஜரை அறிமுகம் செய்து, உலகிலேயே அதிவேக சார்ஜரை வெளியிடும் நிறுவனம் என்ற பெருமையை பெறுகிறது.