\
ட்விட்டரில் திடீரென மீம் டெம்ப்ளேட்டாகி வைரலான வேகவைத்த பாஸ்தா!

ட்விட்டரில் திடீரென மீம் டெம்ப்ளேட்டாகி வைரலான வேகவைத்த பாஸ்தா!

ட்விட்டரில் திடீரென மீம் டெம்ப்ளேட்டாகி வைரலான வேகவைத்த பாஸ்தா!
Published on

வேகவைக்கப்பட்ட பாஸ்தா ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது

இணைய உலகம் எதை எப்போது வைரலாக்கும் என தெரியாது. விளையாட்டாக பதிவிடப்பட்ட எத்தனையோ புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. அதேபோல சில புகைப்படங்கள் மீம் டெம்ப்ளேட்டுகளாக சோஷியல் மீடியாவையே வலம் வந்துவிடும். அப்படி ஒருவர் பதிவிட்ட பாஸ்தாவின் புகைப்படம் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

நல்ல மீம் டெம்ப்ளேட் கிடைத்துவிட்டதாக மீம் கிரியேட்டர்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். @bayabikomigim என்ற ட்விட்டர் வாசி சமீபத்தில் வேகவைத்த பாஸ்தா புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார். ஒரு தனி பாஸ்தாவும், அதுபோல 3 பாஸ்தாக்களும் உள்ள அந்த புகைப்படம் ஒரு முகத்தை போலவும். ஆ... என கத்துவதை போலவும் இருக்கும். இந்த பாஸ்தாக்களை அப்படியே கப்பென பிடித்துக்கொண்ட இணையவாசிகள் பல இடங்களில் அதனை பகிர்ந்து பயன்படுத்த தொடங்கினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com