ஜனவரி 15 முதல் மீண்டும் இந்திய சந்தையில் கம்பேக் கொடுக்கும் VAIO லேப்டாப்!

ஜனவரி 15 முதல் மீண்டும் இந்திய சந்தையில் கம்பேக் கொடுக்கும் VAIO லேப்டாப்!

ஜனவரி 15 முதல் மீண்டும் இந்திய சந்தையில் கம்பேக் கொடுக்கும் VAIO லேப்டாப்!
Published on

எதிர்வரும் ஜனவரி 15 அன்று VAIO லேப்டாப் இந்தியாவில் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளது. இப்போதைக்கு இதன் விற்பனை பிளிப்கார்ட் நிறுவனத்தின் மூலமாக ஆன்லைனில் மட்டுமே ஆர்டர் செய்தால் தான் பெற முடியும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. கலர் கலரான வண்ணங்களில், மெல்லிய வடிவமைப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய லேப்டாப் சந்தையில் ஹாட் சேலாகி வந்தது VAIO. திடீரென எந்தவித தகவலும் இல்லாமல் சந்தையில் இருந்து மறைந்துவிட்டது. 

ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் NEXSTO கம்பெனி இந்தியாவில் வயோ லேப்டாப்பை கொண்டுவர ஜப்பானின் வயோ கார்பரேஷனுடன் ஒப்பந்தம் இட்டுள்ளது. NEXSTO மலேஷியா, சிங்கப்பூர், தைவான் மாதிரியான நாடுகளில் வயோ லேப்டாப்பை விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

லேப்டாப் வாங்குபவர்களின் டாப் சாய்ஸாக வயோ இருக்க வேண்டுமென்ற விருப்பத்துடன் இதை இந்தியாவில் லான்ச் செய்ய  உள்ளதாக, தெற்காசிய பிராந்திய வணிக இயக்குனர் சீமா தெரிவித்துள்ளார்.  இதுவரை இந்த வயோ லேப்டாப்பின் ஸ்பெசிபிகேஷன் மாதிரியான விவரங்கள் வெளியாகவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com