இன்ஸ்டாகிராம் சேவையில் சிக்கல் - அடுக்கடுக்காக குவியும் பயனாளர்களின் புகார்

இன்ஸ்டாகிராம் சேவையில் சிக்கல் - அடுக்கடுக்காக குவியும் பயனாளர்களின் புகார்
இன்ஸ்டாகிராம் சேவையில் சிக்கல் - அடுக்கடுக்காக குவியும் பயனாளர்களின் புகார்

இன்ஸ்டாகிராம் சேவையில் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பொது வெளியில் பகிர உதவும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் சேவையில் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக அதன் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பல பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இன்ஸ்ட்டாகிராம் அப்ளிகேஷனை பயன்படுத்துவதில் சிக்கலை சந்தித்து வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக 800 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும் DOWNDETECTOR.COM தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சிக்கல் குறித்து இன்ஸ்ட்டாகிராம் நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளது. ஆண்டராய்ட் மற்றும் IOS இயங்கு தளம் கொண்ட இரண்டு விதமான மொபைல் போன் பயனர்களும் இந்த சிக்கலை எதிர்கொண்டு வருவதாக தெரிகிறது. இன்ஸ்ட்ராகிராம் அப்ளிகேஷன் சிக்கலால் தங்களது போனே பழுதாகி விட்டதாக சிலர் எண்ணியதாகவும் தெரிவித்துள்ளனர். 

போனை ரீஸ்டார்ட் செய்வது, பூட் செய்வது, அப்ளிகேஷனை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தாலும் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கவில்லை என பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் கூகுள் நிறுவனத்தின் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com