ரோவர், ஹலிகாப்டருடன் செவ்வாய்க்கு வெற்றிகரமாக பாய்ந்த நாசா விண்கலம் !

ரோவர், ஹலிகாப்டருடன் செவ்வாய்க்கு வெற்றிகரமாக பாய்ந்த நாசா விண்கலம் !
ரோவர், ஹலிகாப்டருடன் செவ்வாய்க்கு வெற்றிகரமாக பாய்ந்த நாசா விண்கலம் !

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு லாண்ட் ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் வெற்றிகரமாக விண்கலத்தை இன்று ஏவியது நாசா.

நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள விண்கலத்திற்கு 'பெர்சிசவரன்ஸ்' என்று பெயரிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு இன்று ஏவப்பட்ட விண்கலம் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்றடையும் என நாசா தகவல் தெரிவித்துள்ளது. இந்த பெர்சிசவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஒராண்டு தங்கி பல்வேறு ஆய்வுகளில் ஈடுபடும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியைப் பொறுத்தவரை 687 நாட்களாகும்.

இந்த விண்கலத்துடன் துளையிடும் இயந்திரம், 23 அதிநவீன கேமராக்கள் மற்றும் இரண்டு மைக்ரோபோன்கள் சேர்க்கப்பட்டுள்ளது.இது செவ்வாய் கிரகம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற உதவும். இது மனிதகுலத்தின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு விண்வெளி பயணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் வேற்றுகிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டர் எனும் பெருமையை இது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவைத் தொடர்ந்து இந்த மாதத்தில் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட மூன்றாவது விண்கலம் இதுவாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com