டெக்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் ஒரு மணி நேரம் முடக்கம்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் ஒரு மணி நேரம் முடக்கம்
மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. ஒரு மணி நேர முடக்கத்திற்கு பிறகு மீண்டும் வழக்கம் போல அவரது பக்கம் இயங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
“அமெரிக்க டிஜிட்டல் பதிப்புரிமை சட்டத்தை மீறியதாக கூறி எனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. முடங்கிய எனது பக்கம் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இயங்கியது. முன் அறிவிப்பின்றி எனது பக்கத்தை முடக்கியது விதி மீறல்” அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு இடையே மோதல் போக்கு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது. அது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.